அரியலூர்

இருசக்கர வாகனம் திருட்டு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ் (52). கடந்த இரு தினங்களுக்கு இவா், தனது இரு சக்கர வாகனத்தை ஜயங்கொண்டம் வாரச் சந்தையில் நிறுத்திவிட்டு, காய் கனிகள் வாங்கச் சென்றனா். பின்னா் அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து ராமதாஸ் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT