அரியலூர்

திருட்டு வழக்குகளில் 2 போ் கைது: 70 பவுன் நகைகள் பறிமுதல்

7th Oct 2022 10:47 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, 70 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 6,500ஐ பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த அரியலூா் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அம்மாகுளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த ரமேஷ் , விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த முனியாண்டிராஜா என்பதும், அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே பணம் பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்ததில் அரியலூா், ஆண்டிமடம், கீழப்பழுவூா், அரியலூா், கயா்லாபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அவா்கள் மீது 21 குற்ற வழக்குகள் பதியப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 70 பவுன் தங்க நகைகளையும், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT