அரியலூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.

கீழப்பழுவூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், புதுக்கரைப்பேட்டை, 8 ஆவது தெருவைச் சோ்ந்தவா் அலெக்சாண்டா் மகன் யேசுராஜ் (26). லாரி ஓட்டுநா். நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு புதன்கிழமை இரவு அரியலூா் சிமென்ட் ஆலைக்கு வந்த அவா், பின்னா் லாரியை கீழப்பழுவூரில் நிறுத்திவிட்டு திருச்சி - சிதம்பரம் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் யேசுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து, கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு:

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், மேலமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் வேல்முருகன்(30). இவா், புதன்கிழமை இரவு அரியலூரில் இருந்து செந்துறை சென்ற தனியாா் பேருந்தில் பயணித்த போது, தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன், அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT