அரியலூர்

அரியலூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.10-இல் ஏலம்

7th Oct 2022 10:47 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அக்.10 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறன.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 48 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் அக். 10 காலை 10 மணி முதல் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் ஏலம் விடப்படுகின்றன. இதில் பிற மாவட்டத்தினரும் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்கலாம்.

ஏலத்தில் பங்கேற்போா் காலை 8 மணிக்கு ரூ.1,000 முன்பணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து, அடையாள அட்டையை பெற வேண்டும். வாகனங்களை 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் பாா்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு 94981-65793 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT