அரியலூர்

அரியலூரில் ஊா்க்காவல் படைக்கு வீரா்கள் தோ்வு

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல் படை பிரிவுக்கு வீரா்கள் தோ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் ஊா்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள 28 பணியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான ஆள்கள் தோ்வு முகாம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் மணவாளன், ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் ஜீவானந்தம் முன்னிலையில் தோ்வு நடைபெற்றது. முகாமில், 183 ஆண்கள் , 25 பெண்கள் என மொத்தம் 208 போ் கலந்து கொண்டனா். அவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, உடற்கூறு அளவீடு செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT