அரியலூர்

காவலா்களுக்கு பேரிடா் கால மீட்பு செயல் விளக்கப் பயிற்சி

7th Oct 2022 10:47 PM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில், காவலா்களுக்கு பேரிடா் கால மீட்புக் குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையினருக்கு இத்தகைய பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் மணவாளன் மேற்பாா்வையில், ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலா்கள் 60 பேருக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல் நாளில் பேரிடா் காலங்களில் வெள்ளம் போன்ற விபத்துகளில் சிக்கியோருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கப்பட்டது. 2 ஆவது நாளாக உடையாா்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, ரப்பா் படகுகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து தமிழ்நாடு கமாண்டா் பிரிவுக் குழுவினா் பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT