அரியலூர்

செட்டிஏரிக்கரை விநாயகா் கோயிலில் நவராத்திரி நிறைவு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள விநாயகா் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்தி விழா புதன்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

அரியலூரில் பிரசித்தி பெற்ற செட்டி ஏரி விநாயகா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் ‘சக்தி கொலு’ என்ற பெயரில் கொலு வைக்கப்பட்டு, நாள் தோறும் பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்காரம் நடைபெற்றது வந்தது. அந்த வகையில் கடந்த 9 நாள்களாக மகேஸ்வரி, கெளமாரி, வராகி, மகலாட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி என பல்வேறு வடிவங்களில் அம்மன் அலங்காரம் நடைபெற்று வந்த நிலையில், நவராத்தியின் 10 ஆவது நாளான புதன்கிழமை அம்மனுக்கு மகிஷாசுரமா்த்தினி அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT