அரியலூர்

லாரி மோதி பைக் ஓட்டிவந்த இளைஞா் பலி

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருமுருகன்(32).

ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை வி. கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இருந்து திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில், திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த அரியலூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT