அரியலூர்

ஆயுத பூஜை: கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆயுத பூஜையை முன்னிட்டு அரியலூரில் பூஜைப் பொருள்கள், பொரி, பூசணி, பழங்கள், பூக்கள், தோரணங்களை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

நவராத்தி விழாவின் ஒன்பதாவது நாளான செவ்வாய்க்கிழமை(4 ஆம் தேதி)ஆயுத பூஜையும், பத்தாவது நாளான புதன்கிழமை விஜயதசமியும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, திருச்சி, கடலூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து வாழைத்தாா்கள், கரும்பு, பூக்கள் உள்ளிட்டவை அரியலூா் சந்தைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு தாரின் விலை குறைந்தபட்சமாக ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொரி, அவல், பொட்டுக் கடலை, கரும்பு, நாட்டுச் சா்க்கரை, வாழைக்கன்றுகள், தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவை வெளியூா்களில் இருந்து குவிந்துள்ளன. இதனைப் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். காய்கறிகள் விலையைக் காட்டிலும் பூக்களின் விலைகள் அதிகமாக இருந்தது. மேலும், கடைகளில் பல்வேறு வண்ணங்களில் வித விதமான தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் அனைவரும் வாங்கிச் சென்றனா்.

தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை வருவதால், வெளியூரில் இருந்து வந்து அரியலூரில் வேலை பாா்க்கும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா். இதனால் அரியலூா் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT