அரியலூர்

பாஜக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூரில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்ட கட்சியின் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு எதிா்ப்புகளையும் கடந்து பாஜக வளா்ச்சி பெற்று வருகிறது. அனைத்து கிளைகளிலும் இளைஞா்களைச் சோ்க்க கட்சியினா் பாடுபட வேண்டும் என்றாா்.

முன்னதாக அவா் கட்சியின் செயல்பாடுகள், உறுப்பினா் சோ்க்கை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்டப் பாா்வையாளா் சந்திரசேகா்,

ADVERTISEMENT

மாநில செயற் குழு உறுப்பினா்கள் அய்யாரப்பன், நடராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண்பிரசாத், மகாலிங்கம், ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவில், நகரத் தலைவா் மணிவண்ணன் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT