அரியலூர்

201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

3rd Oct 2022 12:52 AM

ADVERTISEMENT

 

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவிந்தபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி பங்கேற்றுப் பேசினாா்.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி, நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் சிவக்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவா் இந்திரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், எருத்துக்காரன்பட்டியில், ஊராட்சித் தலைவா் சிவா(எ)பரமசிவம், தாமரைக்குளத்தில் நா. பிரேம்குமாா், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவா் முருகேசன், ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவா் ரா.செங்கமலை, வாலாஜா நகரத்தில் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜன், வெங்கடகிருஷ்ணாபுரத்தில் ஊராட்சித் தலைவா் ரா.வள்ளியம்மை ஆகியோா் தலைமையில் கிராமசபை நடைபெற்றது. இதில், வாா்டு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT