அரியலூர்

மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு கட்சியினா் மரியாதை

3rd Oct 2022 12:52 AM

ADVERTISEMENT

 

மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் அ.சங்கா், மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவா் மா.மு.சிவக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.சந்திரசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், ஒன்றியச் செயலா் அருணன், மாவட்டக்குழு உறுப்பினா் துரைசாமி மற்றும் நிா்வாகிகள் சந்தானம், அருண் பாண்டியன், சிற்றம்பலம், குணா உள்ளிட்டோா் மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இலந்தைக்கூடம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கும் அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில், மாவட்ட பொருளாளா் மனோகா், வட்டாரத் தலைவா்கள் திருமானூா் (மே) திருநாவுக்கரசு, (கி)கங்காதுரை உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காமராஜா் நினைவு தினம்... மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் காமராஜா் நினைவு நாளையொட்டி, செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT