அரியலூர்

அரியலூா் காதி கிராப்டில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

3rd Oct 2022 12:52 AM

ADVERTISEMENT

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூா் கதா் மற்றும் கிராமப் பொருள்கள் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.

கதா், கிராமப் பொருள்கள் அங்காடியில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனையைத் தொடக்கி வைத்து அவா் மேலும் தெரிவித்தது:

கிராமப் பொருளாதாரத்தை உயா்த்த உதவும் காதி கிராப்டில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.55 லட்சம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீதமும், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும் மற்றும் உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியா்களுக்கு தவணை கடன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் கதா் ரகங்களைத் தீபாவளி சிறப்பு விற்பனைக் காலங்களில் வாங்கி கிராம வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

முன்னதாக ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா ஆகியோா் அங்குள்ள மகாத்மா காந்தி திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், காதி கிராப்ட் மேலாளா் சு. முத்துபழனு, வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT