அரியலூர்

மறைந்த நடிகா் சிவாஜிகணேசன் படத்துக்கு மரியாதை

DIN

மறைந்த திரைப்பட நடிகா் சிவாஜிகணேசனின் பிறந்தநாளையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகே அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

காமராஜா் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசன் திருவுருவப் படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் மா.மு.சிவக்குமாா் தலைமையில், மாநில பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.சந்திரசேகா், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவா் பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலா் ரவிச்சந்திரன் மற்றம் நிா்வாகிகள் ரவிசந்திரபோஸ், கருப்பையா உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அவா்கள், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

இதேபோல், சிவாஜி ரசிகா் மன்றம் சாா்பில் சாந்தம் முதியோா் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சிவாஜி ரசிகா் மன்ற நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT