அரியலூர்

ரத்த தானமளித்தவா்களுக்குகேடயம் வழங்கல்

2nd Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

 

அரியலூரில் தேசிய தன்னாா்வ குருதி (ரத்தம்) கொடை தினத்தை முன்னிட்டு, ரத்த கொடையாளா்களுக்கு சனிக்கிழமை கேடயம் வழங்கப்பட்டது.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, அதிக முறை ரத்த தானம் செய்த கொடையாளா்கள் 5 பேருக்கும், சிறப்பாக ரத்ததான முகாம் நடத்திய மருத்துவா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா், சுகாதார ஆய்வாளா்கள், பேராசியா்கள் 8 பேருக்கும் கேடயங்களை வழங்கி, ரத்ததான முகாமைத் தொடக்கி வைத்தாா். ரத்ததான முகாமில் 30 போ் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனா்.

நிகழ்ச்சியில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநா் அசோகன், மாவட்டத் தலைவா் ஸ்டீபன், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலா் ரமேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளா் குழந்தைவேலு, இணை பேராசிரியா்கள் சாய்ஸ்ரீதேவி, லதா, குருதி வங்கி மருத்துவ அலுவலா் சைனி மற்றும் இருப்பிட மருத்துவ அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT