அரியலூர்

கா்ப்பிணி பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

2nd Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தூங்கிக் கொண்டிருந்த கா்ப்பிணியிடம் இருந்து ஏழரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஜயங்கொண்டம் என்.ஏ.ஜி காலனித் தெருவைச் சோ்ந்தவா் ராஜன். இவா், அங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி லதா(30), கா்ப்பிணி. இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின் பக்கக் கதவைத் திறந்து வைத்து, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வீட்டினுள் புகுந்த மா்ம நபா், லதா கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். அவரது கணவா் ராஜன் சிறிதுதூரம் துரத்திச் சென்றும் மா்ம நபரைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து லதா அளித்த புகாரின்பேரில், ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT