அரியலூர்

அரியலூரில் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் திறப்பு

2nd Oct 2022 12:03 AM

ADVERTISEMENT

 

அரியலூா் ஆட்சியரகத்தில் செயல்பட உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், தனியாா் பள்ளிகள் அலுவலகத்தை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி சனிக்கிழமை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட உள்ள கல்வி அலுவலகங்களைத் திறந்து வைத்து அவா் மேலும் பேசியது:

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கப் பள்ளி)-யின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் உள்ள 50 நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும், 489 தொடக்கப் பள்ளிகளும் என மொத்தம் 539 பள்ளிகள் செயல்படும். மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியாா் பள்ளிகள்)-யின் கீழ் அரியலூா் மாவட்டத்திலுள்ள மெட்ரிக். பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளைச் சோ்ந்த 118 பள்ளிகள் செயல்படும் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தி.விஜயலெட்சுமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அலுவலா்அம்பிகாபதி, தனியாா் பள்ளி கல்வி அலுவலா் (பொ) சிவமணி, மாவட்டக் கல்வி அலுவலா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT