அரியலூர்

கிராம நிா்வாக அலுவலா்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம்

1st Oct 2022 04:34 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில், இரண்டு கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, 120 கிராம நிா்வாக அலுவலா்கள் பணிக்குச் செல்லாமல் வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பழுவூா் அருகே அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த 11 லாரிகளை முறையாக விசாரிக்காமல், விடுவித்ததாக மேலப்பழுவூா் மற்றும் பூண்டி கிராம நிா்வாக அலுவலா்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட கிராம நிா்வாக அலுவலா்களிடம் முறையாக விசாரணை செய்யாத கோட்டாட்சியரை கண்டித்தும், பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரியலூா் ஆட்சியரகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பெடுத்த 120 கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT