அரியலூர்

ஜயங்கொண்டம் காலணிக் கடையில் தீ

1st Oct 2022 04:35 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காலணிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான காலணிகள் எரிந்தன.

ஜயங்கொண்டம் சன்னதி தெருவில் வசிக்கும் கணேஷ் தனது வீட்டின் கீழ் பகுதியில் காலணி கடையும், மேல்பகுதியில் குடோனும் வைத்துள்ளாா்.

தீபாவளியை முன்னிட்டு புதிய ரக காலணி வகைகள், ஷூக்கள், கிப்ட் பொருள்கள், பேக்குகள் (பை வகைகள்) உள்ளிட்டவற்றை தற்போது கொள்முதல் செய்து குடோனில் வைத்திருந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை குடோன் பகுதியில் கணேஷின் தாய் எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்திவிட்டு அதை நிறுத்தாமல் சென்று விட்டாராம். இதனால், அதிக சூடான ஹீட்டா் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டு குடோனில் இருந்த காலணிகள், ஷூக்கள், லெதா் பேக்குகள் அனைத்தும் எரிந்து சேதமாயின.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT