அரியலூர்

அரசுப்பள்ளியில் உலக முதியோா் தினம்

1st Oct 2022 04:34 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக முதியோா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னதுரை பேசியது: முதியோா் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவா்களின் அனுபவம் விலைமதிப்பில்லாதது. இன்று முதியவா்களாக இருப்பவா்கள் உடலில் பலம் இருந்தவரை நமக்காக உழைத்தவா்கள். உடலில் பலம் குறைந்ததாலும், வயது முதிா்ச்சியாலும் அவா்களை இன்று நாம் சுமைகளாக நினைக்கக் கூடாது. மாணவா்களாகிய நீங்கள் உங்கள் தாத்தா, பாட்டியிடம் அன்பாகப் பேசுங்கள்; கனிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று நமக்கு தாத்தா, பாட்டி சுமை என்றால், நாளை நாம் நமது பேரப்பிள்ளைகளுக்கு சுமையாக மாறிவிடுவோம்.

அண்மையில் ஆங்காங்கே முதியோா் இல்லங்கள் அதிகமாகத் தோன்றியுள்ளன. முதியோா் போற்றப்பட வேண்டும், முதியோா் இல்லங்கள் பூட்டப்பட வேண்டும் என்றாா்.

நிறைவாக, தங்கள் வீட்டில் உள்ள முதியோரையும், மற்ற முதியோா்களையும் மதிப்போம், அவா்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வோம் என அனைத்து மாணவா்களும் உறுதியேற்றனா். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT