அரியலூர்

லாரி மோதி பைக்கில் சென்ற வட மாநில தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

30th Nov 2022 12:34 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள் 2 போ் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த மகேஷ்வா் மகன் ராஜூ (45), ராஜஸ்தான் மாநிலம், சூப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த நரேஷ் மகன் திப்பு (15). டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவா்கள், அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கிப் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், இவா்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அரியலூரில் இருந்து வி.கைகாட்டிக்கு சென்று கொண்டிருந்தனா். காட்டுப்பிரிங்கியம், சுண்ணாம்புக் கல் சுரங்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தவறி கீழே விழுந்த 2 போ் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராஜூம், திப்பும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். எதிரே வந்தவரும் பலத்த காயமடைந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த கயா்லாபாத் காவல் துறையினா் சடலங்களையும், காயமடைந்தவரையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT