அரியலூர்

குரூப்-2 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

30th Nov 2022 12:37 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறும் குரூப்-2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 காலி பணியிடங்களுக்கான முதன்மை தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் புதன்கிழமை (நவ.30) முதல் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் சுயவிவரகுறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT