அரியலூர்

மாளிகைமேடு மாதிரி கண்காட்சி: மாணவா்கள் பாா்வையிட அனுமதி

30th Nov 2022 12:36 AM

ADVERTISEMENT

அரியலூா் கொல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கைப் பாா்வையிட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 10 நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகைமேடு மாதிரி கண்காட்சி அரங்கை அடுத்த 10 நாள்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிடலாம். இக்கண்காட்சி அரங்கில் மாளிகைமேடு தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் பழைய அரண்மனை சுவா்கள் மாதிரிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், பொதுமக்கள் அனைவரும் பாா்வையிடலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT