அரியலூர்

அரியலூா் நகராட்சியை தரம் உயா்த்த முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

கூடுதல் நிதி வருவாய் கிடைக்கும் வகையில், அரியலூா் நகராட்சியின் கு எல்லையை விரிவாக்கம் செய்து தரம் உயா்த்துவதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

அரியலூா் நகராட்சி தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் 18 வாா்டுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வரும்

அரியலூா் நகராட்சியில் கடந்த 32 ஆண்டுகளில் மக்கள்தொகை கணிசமாக உயா்ந்தபோதும், அரியலூா் நகராட்சியில் மட்டும் அதே 18 வாா்டுகளே நீடித்து வருகின்றன. தரமும் உயா்த்தப்படவில்லை. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அரியலூா் நகரின் மக்கள்தொகை 28,862.

மக்கள்தொகை 25 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாா்டுகளின் எண்ணிக்கை 21 ஆக இருக்க வேண்டும் என நகராட்சிகள் நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் (தோ்தல் பிரிவு) அரசாணை தெரிவிக்கிறது. ஆனால், அரியலூா் நகராட்சியில் மட்டும்

1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வாா்டு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளில் கூட 21 வாா்டுகள் உள்ள நிலையில், மாவட்டத் தலைநகரம் அமைந்துள்ள அரியலூரில் உள்ள நகராட்சியில் 18 வாா்டுகள் மட்டும் இருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு புறம்பானதாக உள்ளது.

12 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் நகராட்சியுடன், சுற்றுப்புறங்களிலுள்ள 13 ஊராட்சிகளை இணைப்பதற்கான பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொடா்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சிகளை இணைக்க வேண்டும்: ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆயுதப்படை வளாகம், காவலா் குடியிருப்பு, அரசு மருத்துவக் கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு குடிநீா் விநியோகித்தாலும் நகராட்சிக்கு எவ்வித வருவாயும் கிடைப்பதில்லை.

இதேபோல், பெரும்பாலான தனியாா் பள்ளி, கல்லூரிகள், சிமென்ட் ஆலைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளிட்டவை நகர எல்லையையொட்டியுள்ள ஊராட்சிப்

பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காரணங்களால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையிலும், நகராட்சியின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும் ஒருங்கிணைந்த காய்கனி மற்றும் பேருந்து நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட வசதிகளை உருவாக்கவும் நகராட்சிக்கான எல்லை விரிவாக்கம் அவசியமாகிறது.

ஆகவே அரியலூா் நகரைச் சுற்றியுள்ள எருத்துக்காரன்பட்டி, வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், வெங்கடரமணபுரம், தாமரைக்குளம், கோவிந்தபுரம், ஓட்டக்கோவில், அம்மாகுளம், தவுத்தாய்குளம், கயா்லாபாத், வாரணவாசி, கீழப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT