அரியலூர்

அரியலூரில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா் முதல்வா்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கொல்லாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 51 பணிகளைத் திறந்து வைத்தும் சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிடும் அவா், அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 27 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT