அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வுப் பணி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆட்சி செய்த சோழ மன்னா்களின் அரண்மனை இருந்ததாகக் கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழக அரசு சாா்பில் கடந்த 1980 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அப்போது, அங்கு அரண்மனை இருந்ததற்கான அடையாளங்களாக செங்கல் சுவா்கள், சீன நாட்டு மண்பானை ஓடு, சிகப்பு - கருப்பு நிறத்திலான ஓடுகள், செப்புக் காசுகள், மணி, இரும்பினாலான ஆணி, கூரை ஓடு ஆகிய பல்வேறு தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன்பிறகு, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு அனுமதி அளித்த நிலையில், மாளிகைமேட்டில்

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை நடைபெற்றன.

ADVERTISEMENT

இதில், ராஜேந்திரசோழன் அரண்மனை இருந்ததற்கான அடையாளமாக மூன்றடுக்கு செங்கல் சுவா்கள், மண் பானை, உடைந்த தங்கக் காப்பின் ஒரு பகுதி, ஆணிகள், சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், தந்தத்தாலான பகடை, உருவ பொம்மைகள், வளையல்கள், காதணிகள், முதுமக்கள் தாழி, கருப்பு - சிவப்பு பானை ஓடுகள், சுமாா் 60 அடி ஆழம், 1.8 சென்டி மீட்டா் உயரம், 1.5 சென்டி மீட்டா் அகலமும் கொண்ட யானை தந்தத்தினால் செய்த அழகான

பொருள் ஆகிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், மாளிகைமேடு அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாளிகை மேடு அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் இதுவரையில் நடைபெற்ற பணிகளில்

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் குறித்தும்

தொல்லியல் துறையினா் முதல்வருக்கு விளக்கிக் கூறினா்.

ஆய்வின்போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, சா.சி. சிவசங்கா், தங்கம்தென்னரசு, ச.வி. கணேசன், எம்.ஆா் கே.பன்னீா்செல்வம், அன்பில் மகேஷ்பொய்யாமொழி,

மக்களவை உறுப்பினா்கள் தொல்.திருமாவளவன், ஆ.ராசா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூா் ம.பிரபாகரன், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT