அரியலூர்

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்: 50 போ் கைது

28th Nov 2022 02:25 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி- கல்லாத்தூா் சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வலியுறுத்தி மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா். போராட்டத்துக்கு முற்போக்கு சிந்தனையாளா் இயக்க மாநிலத் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT