அரியலூர்

2-ஆவது திருமணம் செய்ய முயன்ற இளைஞா் கைது

27th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

 அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 ஆவது திருமணம் செய்ய முயன்ற இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆண்டிமடம் அடுத்த காங்குழி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் கலைச்செல்வன் (34). இவா், தனக்கு திருமணமானதை மறைத்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 27 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளாா். இதுகுறித்து அறிந்த அவரது முதல் மனைவி அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கலைச்செல்வனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT