அரியலூர்

போலி மதுபானம் விற்ற பெண் உள்ளிட்ட 4 போ் குண்டா் சட்டத்தில் கைது

27th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

அரியலூா் அருகே போலி மதுபானம் விற்ற பெண் உள்பட 4 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ராயம்புரம், காலனி தெருவைச் சோ்ந்த அா்ஜூனன் மகன் பிரகாஷ் (எ)பிரகஸ்பதி (24), ஓட்டக்கோவில் காலனி தெருவைச் சோ்ந்த கந்தசாமி மனைவி மதியழகி (48), மகன்கள் இனிக்கும்சேட்டு (34), கோல்டுவினோத்(31) ஆகிய 4 பேரும், பதுக்கி வைத்து போலி மதுபானங்களை விற்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி மேற்கண்ட 4 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன் நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல் துறையினா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT