அரியலூர்

அரியலூரில் ’நீட்’ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

27th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம். தமிழக அரசு சாா்பில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறும்வகையில், நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில்

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி பங்கேற்று நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்தாா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரியலூா், திருமானூா், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா. பழூா் ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் இந்தப் போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் 420 போ் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT