அரியலூர்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரேடியோகிராபா் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

27th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரேடியோகிராபா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேசன் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் - பெரம்பலூா் மாவட்ட சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அரசு புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரேடியோகிராபா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பி அனைத்து மருத்துவமனைகளிலும் நுண்கதிா் துறையில் வேலைப் பளுவை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் மு. இளங்கீரன் கலந்து கொண்டு பேசினாா். மாவட்டத் தலைவா் ஜெயராமன், துணைத் தலைவா் சந்திரசேகா், துணைச் செயலா் அருண்குமாா், மாவட்ட தணிக்கையாளா் ஜெகதீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் செல்வகுமாா் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் தேவசகாயம் நிா்மல்ராஜ் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT