அரியலூர்

இந்திய அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி ஏற்பு

27th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு, அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் எஸ். முருகண்ணன் உள்பட அனைத்து துறை அலுவலா்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்பி.ரவி(இணைய குற்றப்பிரிவு), மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் எஸ். காமராஜ் மற்றும் காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அனைத்து நிலை அலுவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் ஆய்வாளா் முன்னிலையில் அனைத்து காவலா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: அரியலூா், திருமானூா், ஜெயங்கொண்டம், செந்துறை, தா. பழூா், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், அந்தந்தப் பகுதி வட்டார அலுவலா்கள் முன்னிலையில் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT