அரியலூர்

திருக்கு முற்றோதல் திட்டத்தில்பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

27th Nov 2022 02:19 AM

ADVERTISEMENT

 

திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்துக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சிா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் ‘திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1,330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளா்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் ஏற்கெனவே இந்தப் போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் கலந்து கொள்ளக் கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் 26.12.2022 அன்று மாலைக்குள் அரியலூா் ஆட்சியா் வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228188 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT