அரியலூர்

வன உரிமைச் சட்ட அமல் கோரி மயானத்தில் குடியேறி போராட்டம்

26th Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருளா் இன மக்கள் வெள்ளிக்கிழமை மயானத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 4 தலைமுறையாக வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட இருளா் இனக் குடும்பத்தினரின் விவசாய நிலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு வனத் துறையினா் கையகப்படுத்தினா்.

இதையடுத்து கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம், மாநில அரசிடம் இவா்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம்.

இதையடுத்து வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வெள்ளிக்கிழமை தங்களது குடியிருப்பை காலி செய்து, அங்குள்ள மயானத்தில் குடியேறி, உணவு சமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராததால், அங்கு உடையாா்பாளையம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT