அரியலூர்

சீனிவாசபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்

26th Nov 2022 12:23 AM

ADVERTISEMENT

அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி தொடக்கி வைத்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள் குமாா், முருகேசன், வேல்முருகன், ராஜா, பிரபாகரன், கால்நடை ஆய்வாளா் முத்துக்குமரன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் ராமலிங்கம், கலியமூா்த்தி, ஜெயக்குமாரி ஆகியோா் கொண்ட குழுவினா் 339 மாடுகள், 232 செம்மறியாடுகள், 455 வெள்ளாடுகள் உள்ளிட்ட 1,420 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்தனா்.

மேலும் 72 பசுக் கன்றுகள், 419 வெள்ளாடுகள் உள்ளிட்ட 699 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும் செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட14 மாடுகளுக்கு சினை உறுதி செய்யப்பட்டது. சினைத் தருண அறிகுறிகள் தென்பட்ட10 பசுக்களுக்கு இலவசமாக கருவூட்டல் செய்யப்பட்டது.

முகாம் இறுதியில் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு 23 கன்றுகளில் 10 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு அரியலூா் கால்நடைப் பராமரிப்பு துறை உதவி இயக்குநா் சொக்கலிங்கம் பரிசளித்தாா். 61 மாடுகளுக்கு தாது உப்புக் கலவை பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஊராட்சி துணைத் தலைவா் கலைச்செல்வி ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT