அரியலூர்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை மீட்டுத் தர இருளா்கள் கோரிக்கை

26th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து தங்களுக்கான இடத்தை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டும் என்று இருளா் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள பள்ளியிடை கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இரு வேறு சமூகத்தினிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருளா் இன மக்கள், அப்பகுதியை விட்டு கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தனா்.

இந்நிலையில் அங்கு நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், உங்ளது பூா்விக இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை பள்ளியிடை கிராமத்துக்கு வந்து பாா்த்தபோது, அவா்கள் வாழ்ந்த இடமெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து அவா்கள் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து, தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமாா் 4 ஏக்கா் இடத்தை மீட்டு தரக் கோரி வாழ்ந்த இடங்களில் கொடிகளை நட்டனா். எங்களுக்கான இடத்தை மீட்டு தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT