அரியலூா் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபானங்களைக் கடத்தியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் பகுதியில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினா் வெள்ளிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ததில், அதில் மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் நல்லணம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ரா. அண்ணாதுரை (53) என்பதும், இரவு நேரங்களில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.