அரியலூர்

முதல்வா் விழா நடைபெறும் இடம் ஆய்வு

24th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் முதல்வா் பங்கேற்க உள்ள விழா நிகழ்விடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சா் சா.சி. சிவசங்கா், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அரியலூா் மாவட்டம் கொல்லாபுரத்தில் நவ. 29 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வா் பங்கேற்க உள்ளாா். இதைமுன்னிட்டு, விழா மேடை, இடம், பயனாளிகள் அமரும் இடம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, அமைச்சா் சா.சி. சிவசங்கா், நீலகிரி எம்.பி. ஆ. ராசா ஆகிய இருவரும் ஆலோசனை வழங்கினா்.

ஆய்வின்போது, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், பெரம்பலூா் ம. பிரபாகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் அரியலூா் க.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT