அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

19th Nov 2022 12:31 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களுக்கான முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில நடைபெற்ற முகாமை எம்எல்ே க.சொ.க. கண்ணன் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். ஒன்றியக் குழுத் தலைவா் ந. ரவிசங்கா், துணைத் தலைவா் லதா கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், அமிா்தலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரத் தலைமை மருத்துவ அலுவலா் மேகநாதன் தலைமையிலான குழுவினா் பணியாளா்களைப் பரிசோதித்து, சிகிச்சை அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT