அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி மற்றும் உடையாா்பாளையம் பகுதிகளில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம், காலனி தெருவை சோ்ந்த குணசேகரன் மகன் குணால் (21). இவா், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் குற்றத்தை உறுதி செய்தனா். இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து குணாலை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
இதேபோல் உடையாா்பாளையம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தத்தனூா் பொட்டக்கொல்லை வடக்குத் தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் நாவரசு (20) என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.