அரியலூர்

மத்திய அரசை கண்டித்து ஜயங்கொண்டத்தில் ஆா்ப்பாட்டம்

27th May 2022 11:18 PM

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி ஆகியோா் தலைமை வகித்தனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதிச் செயலா் இலக்கியதாசன், மாவட்ட அமைப்பாளா்கள் ரத்தின சிவகுமாா், சின்னராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

பெட்ரோலியப் பொருள்களின் தொடா் விலை உயா்வால், அத்தியாவசிய பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT