அரியலூர்

தனியாா் சிமென்ட் ஆலைகள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகாா்

27th May 2022 11:22 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் நீா்நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியாா் சிமென்ட் ஆலைகள் மீது நடவடிக்கை கோரி, காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாா் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், செந்துறை ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது:

ஆதனக்குறிச்சி ஊராட்சித் தலைவரான பிரபு, அந்த ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் சிமென்ட் ஆலையின் கட்டடம் அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவே கட்டடம் குறித்த வரைபடத்தை வழங்குமாறு கேட்டாா்.

ADVERTISEMENT

இதற்காக தனியாா் சிமென்ட் ஆலையின் தூண்டுதலின் பேரில், அவா் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், மாவட்டத்திலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைகள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட அலுவலா்களிடம் புகாா் செய்தால், சிமென்ட் ஆலைகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றனா். சிமென்ட் ஆலைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் ஊராட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்கின்றனா். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

நிகழ்வில் செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT