அரியலூர்

கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

27th May 2022 11:21 PM

ADVERTISEMENT

அரியலூா் ஆட்சியரகத்திலுள்ள மண்டலக் கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இப்பயிற்சிக்கு மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ம.தீபாசங்கரி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் சங்கரலிங்கம் பங்கேற்று பேசினாா்.

அரியலூா் சரகத் துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன், துணைப் பதிவாளா் த.அறப்பள்ளி, மற்றும் கூட்டுறவு சாா்பதிவாளா், கண்காணிப்பாளா், கள அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் பயிற்சியில் பங்கேற்றனா்.

பொதுவிநியோகத் திட்டம், கடன் வழங்குதல், அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டப்பூா்வத் தகவல்கள், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் அலுவலா்களுக்கு கடமைகள், பொறுப்புகள், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வின்போது கவனிக்க வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து விளக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT