அரியலூர்

வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 10-க்குள்தனியாா் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய அழைப்பு

27th May 2022 11:22 PM

ADVERTISEMENT

அரியலூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தனியாா் நிறுவனங்கள், தங்களது வருகையை உறுதி செய்யும் வகையில் ஜூன் 10-க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் படித்து, வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தனியாா் துறைகளில் பணியமா்த்தம் செய்யும் நோக்கோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது.

எனவே இம்மாவட்டத்தைச் சாா்ந்த தனியாா்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்யும் பொருட்டு, இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT