அரியலூர்

அரவக்குறிச்சி அருகே தாா்சாலை அமைக்க அதிமுகவினா் பூமி பூஜை

27th May 2022 11:24 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே தாா்சாலை அமைக்கும் பணிக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை பூமி பூஜை போட்டனா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஒரு ஆண்டுகளாக நலத்திட்ட பணிகளுக்கு அமைச்சா் அல்லது சட்டப்பேரவை உறுப்பினா் மூலமாகவே பூமி பூஜை போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சியில் தடாகோவில் பகுதியில் கிரசா் சாலை மற்றும் வேலம்பாடி ஊராட்சியில் மோளையாண்டிபட்டி முதல் வெரிச்சனம்பட்டி வரை தாா்சாலை அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை அரவக்குறிச்சி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி மற்றும் கிழக்கு ஒன்றியச் செயலாளா் கலையரசன் ஆகியோரால் பூமி பூஜை போடப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.

இந்நிகழ்வில் கரூா் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளா் புகழேந்தி, அரவக்குறிச்சி ஒன்றிய துணைச் செயலாளா் ஜெகதீசன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆளுங்கட்சியினா் இல்லாமல் தாா்சாலை அமைக்கும் பணிக்கு அதிமுகவினரால் பூமி பூஜை போடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT