அரியலூர்

அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா்பணியிட மாற்றம்

27th May 2022 11:24 PM

ADVERTISEMENT

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அரவக்குறிச்சி சரக காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் ஈஸ்வரன். இவா் கரோனா பொதுமுடக்கம் காலத்தில் அரவக்குறிச்சி பகுதியில் தீவிர கட்டுப்பாடுகள் விதித்து பொது மக்களின் பாராட்டை பெற்றாா். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் குடியரசு தினவிழாவில் சான்றிதழ் மற்றும் பாராட்டுகள் பெற்றாா். இந்நிலையில், ஈஸ்வரன் கரூா் வெங்கமேடு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். அரவக்குறிச்சி புதிய காவல் ஆய்வாளராக கரூா் மாவட்ட அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் நாகராஜன் பொறுப்பேற்க உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT