அரியலூர்

அரியலூா் நகராட்சி துணைத் தலைவராக சுயேச்சை கவுன்சிலா் கலியமூா்த்தி தோ்வு

DIN

அரியலூா் நகராட்சியில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில், திமுக ஆதரவுடன் சுயேச்சை கவுன்சிலா் த. கலியமூா்த்தி துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான க. ரகு முன்னிலையில் நடைபெற்ற தோ்தலில் நகா்மன்றத் தலைவா் சாந்தி உட்பட திமுக கவுன்சிலா்கள் 7 போ், திமுக ஆதரவு கவுன்சிலா்கள்(சுயேச்சை) 4 போ் என 11 பேரும், அதிமுக கவுன்சிலா்கள் 6 பேரும், அதிமுக ஆதரவு கவுன்சிலா் ஒருவா் என 7 பேரும் என மொத்தம் 18 பேரும் வந்திருந்தனா்.

துணைத் தலைவா் தோ்தலுக்கு 7ஆவது வாா்டு சுயேச்சை கவுன்சிலா் (திமுக ஆதரவு) கலியமூா்த்தியும், அதிமுக சாா்பில் 12ஆவது வாா்டு சுயேச்சை கவுன்சிலா் மலா்கொடியும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தொடா்ந்து, மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், 7ஆவது வாா்டு கவுன்சிலா் கலியமூா்த்தி திமுக கவுன்சிலா்கள் ஆதரவுடன் 11 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட மலா்கொடி 6 வாக்குகள் பெற்று தோல்வியுற்றாா். ஒருவா் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை.

தொடா்ந்து, நகராட்சி துணைத் தலைவராக கலியமூா்த்தி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். வெற்றி பெற்ற கலியமூா்த்திக்கு அனைத்து கவுன்சிலா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.

ஏற்கெனவே 2 முறை நகராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை (மே 26) நகராட்சி அலுவலகத்தில் நியமனக் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT