அரியலூர்

இலுப்பையூா் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

அரியலூரை அடுத்த இலுப்பையூா் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த வாரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் அம்மன் திருவீதியுலா வந்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விநாயகா் மற்றும் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து மா, பலா, வாழை, முந்திரி மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு மதுரகாளியம்மன் எழுந்தருளி, மக்களுக்கு காட்சியளித்தாா்.

கிராம நாட்டாமைகள், முக்கியஸ்தா்கள் மற்றும் சுற்று வட்டாரக் கிராமப் பொதுமக்கள் திரளானோா் தோ் வடம்பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தோ், பின்னா் நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT