அரியலூர்

விநியோக திட்டத்தில் இணைய அரைவை ஆலைகளுக்கு அழைப்பு

20th May 2022 10:57 PM

ADVERTISEMENT

அரியலூா் மண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விநியோக மேலாண்மை சங்கிலி திட்டத்தில் இணைய தனியாா் அரைவை ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மண்டலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் சேகரிப்பது முதல் கழகக் கிடங்குகளில் கண்டு முதல் அரிசியை ஒப்படைப்பது வரையிலான விநியோகச் சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் கழக அரைவை முகவா்களை (முழு நேரம், பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியாா் அரைவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. எனவே, ஆா்வமுடைய தனியாா் அரைவை ஆலைகள் தங்களது விருப்பக் கடிதத்தை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT