அரியலூர்

பெருந்தொற்றுக் காலங்களில் சிறந்த சேவை புரிந்தோருக்கு விருது

20th May 2022 10:56 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில் கரோனா தொற்று காலத்தில் சிறந்த சேவை புரிந்தவா்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மஜக பொதுச்செயலா் தமிமுன் அன்சாரி, கரோனா பெருந்தொற்றுக் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய நகராட்சி வரி ஆய்வாளா் சரஸ்வதி, ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரித் தாளாளா் முத்துக்குமரன் ஆகியோரைப் பாராட்டி விருதுகளை வழங்கி, புதிய ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகம் முழுவதும் ஆயுள் கைதியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவா்களை அண்ணா பிறந்தநாளில் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், ம.ஜ.க மாநிலச் செயலா் முபாரக், துணைச் செயலா் அகமது கபீா் இப்ராஹிம் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் அக்பா் அலி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஷா்பூதீன், ஜயங்கொண்டம் பள்ளிவாசல் தலைவா் முகமது சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT